காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் நாளை காலை அமல்
உடன்படிக்கையை அங்கீகரித்தது இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்

தோகா, ஜன.18; காஸாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நாளை காலை அமலுக்கு வருகிறது. தோகாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இன்று (ஜன.18) இஸ்ரேலிய அரசு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. ஒப்பந்தம் நாளை காலை அமலுக்கு வரும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 46,788 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 1,10,453 பேர் காயமடைந்தனர்.



