சாம்பியன்ஸ் கோப்பை; ஜஸ்பிரித் பும்ரா திரும்புவாரா?

முகமது ஷமியும் முழுமையாகத் தயாராகவில்லை என தகவல்

மும்பை, பிப்.05; சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

வரும் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.

பும்ரா காயத்திலிருந்து மீண்டதாக தகவல் இல்லை

ஆனால், காயத்திற்கு சிகிச்சை பெற்றுவரும் அவர், அதிலிருந்து மீண்டு விட்டதாக தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. பும்ரா காயத்திலிருந்து மீண்டுவிட்டாரா என்பது பற்றி நேர்மறையான தகவல் எதுவும் வரவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

“பும்ராவின் உடற்தகுதி குறித்த பெரிய செய்திகளை நான் கேட்கவில்லை; இருப்பினும், நான் கேள்விப்பட்ட செய்திகளை நம்ப மாட்டேன்; நான் கேட்டதையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்” என்று சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசினார்.

ஷமியும் தயாரானதாக தெரியவில்லை; ஆகாஷ் சோப்ரா

முகமது ஷமியின் ஃபார்ம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், அவர் முழுமையாகத் தயாராகிவிட்டாரா என சந்தேகம் இருப்பதாகவும் சோப்ரா கூறினார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் 100% உடல் தகுதியுடன் இருப்பது அவசியம் என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x