“அமெரிக்காவில் ஆபத்தான அதிகாரக் குவிப்பு”
பதவி விலகும் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன், ஜன.16; அமெரிக்காவில் உள்ள ஒரு சில செல்வந்தர்களிடையே “ஆபத்தான அதிகாரக் குவிப்பு” அதிகரித்து வருவதாக, பதவி விலகும் அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து விடைபெறவிருப்பதை ஒட்டி உரையாற்றிய பைடன், தன்னலக்குழுக்கள், தவறான தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட கடுமையான நெருக்கடியிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனநாயகக் கட்சி சிறப்பாக செயல்பட்டதாக பைடன் பெருமிதம் தெரிவித்தார்.







