இந்தி நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து
அதிகாலை நடந்த கொள்ளை முயற்சியின்போது பயங்கரம்

மும்பை, ஜன.16; கொள்ளை முயற்சியின்போது கத்தியால் குத்தப்பட்ட இந்தி நடிகர் சயிஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சைஃப் அலிகானின் வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையன் , பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளான். தடுக்க முயன்ற சயிஃப் அலிகானை கொள்ளையன் 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டான். படுகாயமடைந்த சயிஃப் அலிகான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சயிஃப் அலிகான் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.







