‘தென்றல் வந்து தீண்டியதால்’ ரூ.1 கோடி லாபம்..!
படத்தால் ஏற்பட்ட இழப்பை ஒரே பாட்டில் பார்த்த தயாரிப்பாளர்

சென்னை, ஜன.22; நடிகர் நாசர் முதன்முறையாக இயக்கி, 1995-ல் வெளியான படம் ‘அவதாரம்’. பாடல்கள் ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால், படம் தோல்வியடைந்து, ரூ.46 லட்சம் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், தயாரிப்பாளர் கவலைப்படவில்லை. காரணம், படத்தில் இடம்பெற்ற “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..” என்ற பாடல். அந்த ஒரு பாடலுக்காகவே அன்றைக்கு கேசட்டுகள் லட்சக்கணக்கில் விற்றுத்தீர்ந்து தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடிக்கு மேல் லாபம் கிடைத்தது.



