திபெத்தில் நிலநடுக்கம்; 50-க்கும் மேற்பட்டோர் பலி
நேபாளத்திலும் நில அதிர்வுகள்; பீதியில் உறைந்த மக்கள்

திபெத், ஜன.7; 62 பேர் காயமடைந்தனர். 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் நிகழ்ந்த பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் உணரப்பட்டது. அங்கு கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.







