மாணவி பாலியல் வன்கொடுமை; 3 ஆசிரியர்கள் கைது
வேலியே பயிரை மேய்ந்ததால் உறவினர்கள், ஊர் மக்கள் ஆத்திரம்

கிருஷ்ணகிரி, பிப்.05; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக மாணவி பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியர் அவளது வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவி கருவுற்று, அதனை கலைத்தது தெரியவந்தது. பின்னர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.



