மகாகும்பமேளா; ஒரு கோடி பேர் புனித நீராடல்
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு

பிரயாக்ராஜ், ஜன.13; உத்தரப்பிரதேசத்தில் தொடங்கியுள்ள மகாகும்பமேளாவில், முதல் நாளான இன்று சுமார் ஒரு கோடி பேர் புனித நீராடினார்கள். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த அரிய நிகழ்வையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் குவிந்தனர். மகர சங்கராந்தி தினமான நாளை, மௌனி அமாவாசை நாளான வரும் 29ஆம் தேதி, பசந்த பஞ்சமி நாளான பிப்ரவரி 3ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு நீராடல்கள் நடைபெறுகின்றன. இந்த கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.






