எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு உயர் பதவி!

டொனால்ட் டிரம்ப் அதிரடி!

தொழிலதிபர்கள் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர், அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய கமலா ஹாரிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள அவர், தமது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இதனடிப்படையில், தமது வெற்றிக்கு பெரும் பங்காற்றிய தொழிலதிபரான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், இந்திய வம்சாவழி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோருக்கு, அமெரிக்கா அரசின் திறன் துறைக்கு (D.O.G.E.) தலைமைப் பதவிகளை அளித்து டிரம்ப் பெருமைப்படுத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும், எனது அரசில் பணியாற்றுவதற்கும், வீண் செலவைக் குறைக்கவும், அமெரிக்காவை காப்பாற்றுவதற்கும் தேவைப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 4ம் தேதிக்குள் அவர்களின் பணிகள் முடிவடையும்; அமெரிக்காவை காப்பாற்றுவோம்’ (Save America) இயக்கத்திற்கு இது மிகவும் அவசியம் என டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டு விழாவில், திறமையான அரசாங்கம் அமைந்திருப்பது நாட்டிற்கு கிடைத்த பரிசு’ எனவும் தமது அறிக்கையில் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

D.O.G.E. என்பது இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய அணுகுண்டை உருவாக்கும் அமெரிக்காவின் திட்டத்தைக் குறிப்பிடுவதாகும். அமெரிக்கா அரசின் இந்த முக்கிய திறன் துறைக்குதான் (D.O.G.E.) எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை வகிப்பார்கள் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x