இங்கிலாந்திலும் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு சிக்கல்
இந்திய உணவகங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு

லண்டன், பிப்.10; இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இங்கிலாந்தில் இந்திய உணவகங்கள், நெயில் பார்கள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் கார் வாஷ் போன்றவற்றில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பணியாற்றுவோர் மீது நடவடிக்கை

அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் 828 வளாகங்களில் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய 609 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறைச் செயலாளர் கூப்பர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

இது கடந்த ஆண்டைவிட 73% அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 48% அதிகரித்து வருவதாக கூப்பர் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் சட்டவிரோதமாக பணியாற்றுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் உள்துறை செயலாளர் கூப்பர் கூறியிருக்கிறார்.







