ஹெலிகாப்டர் விபத்தில் விமானிகள் உள்பட 3 பேர் பலி

விமானநிலையத்தில் தரையிறங்கும்போது நேர்ந்த பயங்கரம்

போர்பந்தர், ஜன. 5; குஜராத் மாநிலம் போர்பந்தரில், கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் மற்றும் ஒரு பணியாளர் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சி முடிந்த பின்னர் அந்த ஹெலிகாப்டர் போர்பந்தர் விமானநிலையத்தில் தரையிறங்கும்போது விபத்து நேரிட்டது. சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x