பொங்கல் பரிசுத்தொகுப்பு; நாளை முதல் டோக்கன்
ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்க நடவடிக்கை

சென்னை, ஜன.2 ; பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேட்டி சேலைகள் வழங்கவும் நடவடிக்கை

அதேபோல பொதுமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
நாளை முதல் வீடு வீடாக டோக்கன்

இந்த சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை (ஜன.3) முதல் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
தொகுப்பு பெறும் நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலையில் 100 பேர், மாலையில் 100 பேர்

அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளை முதல் வீடு வீடாகச் சென்று வழங்க உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளைமுதல் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர். நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






