டெல்லி முதலமைச்சர் அதிஷி பதவி விலகல்
சட்டப்பேரவையை கலைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவு

டெல்லி, பிப்.09; டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, முதலமைச்சர் அதிஷி பதவி விலகியுள்ளார். இதனையடுத்து சட்டப்பேரவையை கலைத்து துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார். டெல்லியின் புதிய முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து பாரதிய ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. நியூடெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்படலாம் என பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



