“விசயங்களை மறக்கும் வழக்கம் கொண்டவரா?”
மந்தனா கேள்வி.. ரோகித் பதில்.. அனைவரும் திகைப்பு..!

மும்பை, பிப்.02; இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விசயங்களை மறந்து விடுவதை வழக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். இதுகுறித்து சகவீரர்கள் பலர் ஏற்கனவே ஊடகங்களில் பேசியுள்ளனர்.
இதுபோன்ற சூழலில், நேற்று மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரிய விருதுகள் வழங்கும் விழாவில், ஞாபக மறதி தொடர்பான ஒரு கேள்வியை ரோகித் எதிர்கொண்டார்.
ஞாபக மறதி பற்றி ரோகித்திடம் மந்தனா கேள்வி

அப்போது நடைபெற்ற உரையாடலில், அந்தக்கேள்வியை எழுப்பியவர் ரோகித் சர்மாவின் சக வீரர்கள் அல்ல. மாறாக மகளிர் கிரிக்கெட் அணியின், ஸ்மிருதி மந்தனா.
“சக வீரர்கள் உங்களை கிண்டல் செய்யும் வகையில் சமீபத்தில் ஏதேனும் ஒரு ‘hobby’-யை பழகினீர்களா?” என்று மந்தனா வினவினார்.
விசயங்களை மறந்துவிடுவதாக சகவீரர்கள் கிண்டல்: ரோகித்

அதற்கு, “எனக்குத் தெரியாது, விசயங்களை மறந்துவிடுவதைப் பற்றி அவர்கள் (சகவீரர்கள்) என்னைக் கிண்டல் செய்கிறார்கள், இது ஒரு ‘hobby’ அல்ல, ஆனால் இதைக் கூறிதான் அவர்கள் என்னை கிண்டல் செய்கின்றனர், நான் எனது பணப்பையையும் பாஸ்போர்ட்டையும் மறந்துவிட்டேன் என அவர்கள் கூறுவது உண்மை இல்லை” என்று ரோகித் சர்மா பதிலளித்தார்.
“என் மனைவி பார்த்துக் கொண்டிருப்பார்..!”

இதுவரை மறந்த பெரிய விசயங்களைப் பற்றி கூற முடியுமா என்று ரோகித் சர்மாவிடம் மந்தனா கேள்வி எழுப்பினார்.
“அப்படிச் சொல்ல முடியாது, இந்த நிகழ்வு (ரோகித்- மந்தனா உரையாடல்) நேரலையில் வந்தால், என் மனைவி பார்த்துக் கொண்டிருப்பாள், என்னால் அதைச் சொல்ல முடியாது. அந்த விசயம் என்னிடமே இருக்கட்டும்” என ரோகித் சர்மா அளித்த பதிலால் அங்கு திரண்டிருந்தவர்கள் ஒரு கணம் திகைத்துப் போயினர்.







