சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ரிஷப் பன்ட் நீக்கம்
சஞ்சு சாம்சன் (அ) கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு

மும்பை, ஜன. 10 ; சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டுள்ளார். தொடரில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 12ஆம் தேதி அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்வுக்குழுவைச் சேர்ந்த சஞ்சய் மஞ்ச்ரேகர் மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோர் ரிஷப் பன்ட்டை நீக்கி உள்ளனர். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது கே.எல். ராகுலை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.







