சீனாவில் நிலச்சரிவு; 29 பேரை தேடும் மீட்புக்குழு

கனமழையால் பேரழிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல்

பெய்ஜிங், பிப்.09; தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 29 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். சிச்சுவான் மாகாணத்தில் நேரிட்ட நிலச்சரிவினால் 10 வீடுகள் மண்ணில் புதையுண்டன. அப்போது சிக்கிக்கொண்ட 2 பேரை காயங்களுடன் தீயணைப்புப் படையினர் மீட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த மோசமான பேரழிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலச்சரிவால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x