சந்தேகத்தை எழுப்பும் விராட் கோலி அவுட்

DRS தொழில்நுட்பக் கோளாறு காரணமா?

கட்டாக், பிப்.10;  கட்டாக்கில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அவுட் என அறிவிக்கப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமா என சந்தேகம் எழுப்பப்படுகிறது.

முழங்கால் வீக்கத்தால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை தவறவிட்ட கோலி, நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்யும்போது, 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடில் ரஷித் பந்தில் 5 ரன்களில் கேட்ச் ஆனார்.

கோலி.. இங்கிலாந்து முறையீடு..நடுவர் ஏற்கவில்லை

கோலிக்கு அவுட் கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் முறையீடு செய்தபோதிலும் நடுவர் அதனை ஏற்கவில்லை.

பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், DRS முறையில் நடுவரின் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று கோரினார்.

DRS முறையில் அவுட் என அறிவிப்பு; கோலி எதிர்வினை

இதனையேற்று, விராட் கோலியின் மட்டையில் பந்து உரசிச் சென்றதா என ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பந்து தனது மட்டையை தொட்டுச் சென்றதாக தான் உணரவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் விாாட் கோலி எதிர்வினையாற்றினார்.

அது DRS தொழில்நுட்பக் கோளாறாகக் கூட இருக்கலாம் என்கிற ரீதியிலும் அவரது எதிர்வினை பார்க்கப்பட்டது.

பந்து மட்டையில் உரசிச்சென்றதை கோலி உணரவில்லை..!

ஆனால், பந்து மட்டையின் விளிம்பில் பட்டுச் சென்றிருக்கும் என்றும் அதனை கோலி உணராமல் இருந்திருக்கலாம் என்றும்,போட்டி வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

DRS (umpire decision review system) என்பது, முடிவை மறு ஆய்வு செய்யும் முறையாகும். போட்டியில் சந்தேகம் எழுந்தால் நடுவர்கள் முடிவெடுக்க உதவுவதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பாகும்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x