மேற்குக்கரையில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கை: இஸ்ரேல்

மேற்குக்கரை, ஜன.22; ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் பகுதியில், இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த மூன்றே நாட்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. செவ்வாயன்று பல வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களின் கோட்டையாகக் கருதப்படும் ஜெனினில் “பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க” ஒரு “விரிவான மற்றும் குறிப்பிடத்தக்க” நடவடிக்கையைத் தொடங்கியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.







