“சண்டை நிறுத்தத்திற்குப் பின் அமைதியாக கழிந்த இரவு”
அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை: இந்திய ராணுவம்

காஷ்மீர், மே.12; சண்டை நிறுத்தத்திற்குப் பின்னர் ஜம்மு-காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பிற பகுதிகளில் இரவுப்பொழுது “பெரும்பாலும் அமைதியானதாக” இருந்தது என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
பாகிஸ்தான் நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்தது.
சண்டையில் இந்தியா தரப்பில் பெரியளவில் சேதம் எதுவும் இல்லையென்ற போதிலும், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் கொல்லப்பட்டனர். அவர்களது முகாம்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சண்டை நிறுத்தத்தால் எல்லையில் அமைதி

இது போன்ற சூழலில், கடந்த சனிக்கிழமையன்று (மே.10) இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இதனால் பதற்றம் தணிந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பிற பகுதிகளில் நேற்றைய இரவுப்பொழுது “பெரும்பாலும் அமைதியானதாக” இருந்தது என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் முதல் அமைதி இரவு: இந்திய ராணுவம்

“சமீபத்திய நாட்களில் முதல் அமைதியான இரவைக் குறிக்கும் வகையில், எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை” என்று இராணுவ வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.







