காசாவை அழகுபடுத்தும் ட்ரம்பின் திட்டம் நிறைவேறுமா ?
ஜெனீவா உடன்படிக்கையின்படி சிக்கல் இருப்பதாக தகவல்

வாஷிங்டன், பிப்.05; பாலஸ்தீனத்தின் காசா பகுதியை மீண்டும் அழகாக மாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் திட்டத்தை நிறைவேற்றுவதில் சட்டரீதியாக சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பின்னர் பேசிய டொனால்டு ட்ரம்ப், “காசா இடிக்கப்பட வேண்டிய தளம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
காசாவை அழகுபடுத்தும் ட்ரம்பின் திட்டம்

இதற்கு காசா பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
காசாவை முற்றிலுமாக சுத்தம் செய்து அழகுபடுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீன தரப்பில் கடும் எதிர்ப்பு

இதற்கு பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாலஸ்தீன மக்கள் தங்கள் மண்ணை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
இதுபோன்ற சூழலில், ஜெனீவா உடன்படிக்கைகளின்படி, காசா பகுதியில் வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சர்வதேச சட்டம் கண்டிப்பாக அனுமதிக்காது எனக் கூறப்படுகிறது.
வலுக்கட்டாய வெளியேற்றம் சில சூழ்நிலைகளில் அனுமதிக்கலாம்

இருப்பினும், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் அது அனுமதிக்கப்படலாம் என்றும் ஜெனீவா சட்டம் கூறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதாவது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரிடும்போது அல்லது கட்டாய ராணுவ காரணங்களால் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை ஜெனீவா சட்டம் அனுமதிக்கிறது என்று கூறப்படுகிறது.







