சில மாதம் கேப்டனாக நீடிக்க ரோகித் சர்மா விருப்பம்
அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?; பிசிசிஐ யோசனை

மும்பை, ஜன.12; இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்க விரும்புவதாக, கிரிக்கெட் வாரியத்திடம் ரோகித் சர்மா கூறியதாக கூறப்படுகிறது. முக்கிய கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் ரோகித் தனது விருப்பத்தை தெரிவித்ததாக தெரிகிறது. ரோகித் சர்மாவுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்கலாமா என முன்வைக்கப்பட்ட யோசனையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.







