கட்டடம் இடிந்து விழுந்ததால் சிக்கிய 28 பேர்
16 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்பு

கன்னோஜ், ஜன.12; உத்தரப்பிரதேசத்தில், ரயில் நிலைய கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிய 28 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கன்னோஜ் ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்படும் கட்டடத்தின் ஷட்டர் இடிந்து விழுந்ததில், 28 பேர் சிக்கிக் கொண்டனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படைகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். நேற்று தொடங்கிய மீட்புப்பணி 16 மணி நேரத்திற்குப் பின்னர் இன்று முடிவுக்கு வந்தது. மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







