கர்நாடகாவில் பீர் விலை இன்னொரு ‘ரவுண்டு’ உயர்கிறது?
அருந்தாமலேயே மட்டையாகப் போகும் மதுபான பிரியர்கள்..!

பெங்களூரு, ஜன. 10 ; கர்நாடகாவில் பீர் விலை இன்னொரு ‘ரவுண்டு’ உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டில், பீர் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ.15 வரையும், பிப்ரவரி 2024 இல், ரூ.15-ம் உயர்த்தப்பட்டது. இதுபோன்ற சூழலில், பீர் விலையை மீண்டும் உயர்த்த அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விலை உயர்வு குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கலால் துறை அமைச்சர் திம்மாபூர் கூறியிருப்பது, பீர் விரும்பிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.



