“பேட்டிங் அணுகுமுறையை உடைத்து சதமடித்தேன்”
அணிக்காக சதமடித்ததாக கேப்டன் ரோகித் சர்மா நெகிழ்ச்சி

கட்டாக், பிப்.10; இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தனது பேட்டிங் அணுகுமுறையை உடைத்து சதமடித்ததாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா வென்ற இந்தப் போட்டியில், அணிக்காக சதமடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். அணிக்காக சில ரன்களை எடுத்தது மனநிறைவை தந்ததாகவும், இது ஒரு முக்கியமான போட்டி என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தனது உடலை குறிவைத்தபோதிலும், பந்தை சரியான இடைவெளியில் அனுப்பி ரன்களை எடுத்ததாக ரோகித் தெரிவித்தார்.



