வேட்டையனுக்கு U/A சான்றிதழ்

ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

லைகா தயாரிப்பில் வெளிவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இவர்களுடன், துஷாரா விஜயன், பஹத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் நடித்துள்ளனர். வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பாடல்களில் தனது துள்ளலான இசையின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அனைத்தையும் அனிருத் பூர்த்தி செய்திருக்கிறார்.

இந்த நிலையில் படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அதிலும், ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார். தனது மாஸ் ஆன ஆக்ஷன் காட்சிகளின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ரஜினி இந்த முறையும் தனது ரசிகர்களுக்கு தனது சிறப்பான நடிப்பின் மூலம் பரவச விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x