மன்மோகன் சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்குகள்

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: மத்திய அரசு

டெல்லி, டிச.27 ; மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் சீர்திருத்த சிற்பி என்றழைக்கப்படும் டாக்டர்  மன்மோகன் சிங், டெல்லியில் நேற்றிரவு (டிச.26) இயற்கை எய்தினார்.

மோடி, ஸ்டாலின் நேரில் அஞ்சலி

டெல்லியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.  பின்னர் அவர்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல் நாளை நல்லடக்கம்

மறைந்த மன்மோகன் சிங்கின் மகள் அமெரிக்காவிலிருந்து வரவேண்டியிருப்பதால், உடலுக்கு நாளை காலை 9.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x