“ரஞ்சி கோப்பையில் விளையாட முடியாது”
உடல்நிலை சரியில்லை எனக்கூறி கோலி, ராகுல் மறுப்பு

மும்பை, ஜன.18; விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக வரும் 23ஆம் தொடங்கவிருக்கும் அடுத்த சுற்று ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட முடியாது என, கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய மருத்துவப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கழுத்து வலியால் கோலியும், முழங்கை பிரச்னையால் கே.எல். ராகுலும் அவதிப்பட்டு வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்று விளையாட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து கட்டுப்பாடுகளை கிரிக்கெட் வாரியம் பிறப்பித்துள்ள நிலையில், அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



