2012க்குப் பிறகு ரஞ்சி கோப்பையில் கோலி
இளம் வீரர்கள் குவிந்ததால் மைதானத்தில் உற்சாகம்

டெல்லி, ஜன.29; நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 2012-க்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டிக்கு திரும்பி உள்ளார். இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இதனையொட்டி, டெல்லி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியில் அவர் பங்கேற்றார். கோலி வந்திருப்பதை அறிந்த செய்தியாளர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு வந்ததால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.







