பிரக்ஞானந்தாவிடம் தோற்றுப்போனார் குகேஷ்
பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்ததால் மனமுடைந்தார், குகேஷ்

டெல்லி, பிப்.03; டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில், உலக சாம்பியனான டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தாவிடம் தோற்றுப்போனார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில், உலகச் சாம்பியன் டி. குகேஷ், இந்தியன் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.
பட்டம் வெல்ல குகேஷ்-பிரக்ஞானந்தா பலப்பரீட்சை

இந்திய சதுரங்கத்தின் தொட்டிலாக மாறியிருக்கும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான இந்தப் போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இரு வீரர்களும் தங்களது 13ஆவது சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்து 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா வெற்றி

பட்டம் வெல்வதற்கான சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்த பிரக்ஞானந்தா, 87ஆவது நகர்வு டைபிரேக்கரில், 2-1 என்ற கணக்கில் குகேஷை வீழ்த்தினார். பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த குகேஷ் மனமுடைந்து நொறுங்கிப் போனார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்; முதன்முறையாக பிரக்ஞானந்தா பட்டம்

கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா தனது சதுரங்க வாழ்க்கையில் முதன்முறையாக டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
“எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை; இன்னும் எனது கைகள் நடுங்குகின்றன; நான் வெற்றி பெறுவேன் என்று உண்மையில் எதிர்பார்க்கவில்லை; எப்படியோ விஷயங்கள் என் வழியில் நடந்தன; இது மிகவும் பதற்றமான, மன அழுத்தம் நிறைந்த நாள்” என்று பிரக்ஞானந்தா தனது வெற்றிக்குப் பிறகு அதிகாரப்பூர்வ போட்டி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் 3 முறை பட்டம் வென்றுள்ளார்

விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். ஆனந்த் 2003, 2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் இந்தத்தொடரில் பட்டம் வென்றார்.







