காங்கோவில் இந்தியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலா?

பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தூதரகம் அறிவுரை

கின்ஷாசா, பிப்.04; மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில், கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக அசாதாரணமான சூழல் நிலவுவதால், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ருவாண்டா ஆதரவுடன் இயங்கும் M23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழு, காங்கோவின் கிழக்கு நகரமான கோமாவைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள்-ராணுவம் மோதல்; 750 பேர் பலி

அப்போது கிளர்ச்சியாளர்களுக்கும் காங்கோ ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், கடந்த ஒரு வாரத்தில் 750-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

எனவே, புகாவு நகரில் வசிக்கும் சுமார் ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு, தலைநகர் கின்ஷாசாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அவசர திட்டம் ஒன்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x