மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் நீரஜ் சோப்ரா
மணப்பெண் ஹிமானி அமெரிக்காவில் படித்து வருபவர்

இமாச்சலப்பிரதேசம், ஜன.20; ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஹிமானி என்பவரை மணந்தார். இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற எளிமையான மணவிழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீரஜ் சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்த தருணத்தில் எங்களை ஒருங்கிணைத்த ஒவ்வொருவரின் ஆசீர்வாதத்திற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மணப்பெண் ஹிமானி அமெரிக்காவில் படித்து வருவதாகவும், அவர் ஒரு டென்னிஸ் வீராங்கனை எனவும் சோப்ராவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



