இந்தியா தொடரை இழந்தது எதனால்?
ஸ்காட் போலண்ட்டின் மறுபிரவேசமே காரணம்: அஸ்வின்

சென்னை, ஜன.16; இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட்தான் காரணம் என்று, ஆர். அஸ்வின் தெரிவித்துள்ளார். தொடர் 1-1 என சமநிலையில் இருந்தபோது, கடைசி 2 டெ,ஸ்ட்டுகளில் போலண்ட்டின் மறுபிரவேசத்தால் வெற்றி ஆஸ்திரேலியா வசமானது என்று தெரிவித்துள்ளார். போலண்ட் விளையாடாமல் இருந்திருந்தால் இந்தியா தொடரை வென்றிருக்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச கம்மின்ஸ் போராடியபோது, ஆஸ்திரேலியாவுக்கு கைகொடுத்தது போலண்ட் தான் என அஸ்வின் கூறியுள்ளார்.







