சபரிமலையை மேம்படுத்த ரூ.1,033.62 கோடி நிதி
மாஸ்டர் பிளானுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம், ஜன.9 ; சபரிமலையின் மேம்பாட்டிற்காக ரூ.1,033.62 கோடியில் மாஸ்டர் பிளானை செயல்படுத்தகேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பண்பாட்டு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதிகளை செய்து தருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சன்னிதானம், பம்பை மற்றும் டிரக் வழித்தடத்தை மேம்படுத்துவது மாஸ்டர் பிளான் திட்டத்தின் நோக்கமாகும். ரூ. 778.17 கோடி மதிப்பீட்டில் சன்னிதானம் பகுதி மூன்று கட்டங்களாக மேம்படுத்தப்படும். முதல் கட்டமாக ரூ.600.47 கோடி மதிப்பீட்டில், 2028-20233க்குள் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.






