33 பணயக்கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்?
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதற்கட்ட நடவடிக்கை

காஸா, ஜன.14; இஸ்ரேல் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் கட்டமாக 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதி வரைவை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் வழங்கினர். அதனடிப்படையில், முதற்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர் 33 பணயக்கைதிகளை விடுவிக்க வாய்ப்புள்ளதாக சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கையொப்பமிட்டவுடன், இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் சி.என்.என் தெரிவித்துள்ளது.



