ரோகித், கம்பீர், அகர்கர் இடையே விரிசலா?
கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய துணைத்தலைவர் விளக்கம்

டெல்லி, ஜன.15; ரோகித் சர்மா, கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் ஆகியோரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது. இதனை மறுத்துள்ள கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், அவர்கள் மூன்று பேரிடையே பிளவுகள் ஏற்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகளை நிராகரித்தார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 18 அல்லது 19ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்றும் சுக்லா தெரிவித்தார்.







