காசாவில் 5 பேரில் ஒருவருக்கு உணவுப் பற்றாக்குறை

மொத்த மக்கள் தொகையில் 93% பேரின் அவலநிலை

காசா,மே.14; போரால் உருக்குலைந்த காசாவில் 5 பேரில் ஒருவர் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் நிலை குலைந்து போயிருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், பசியைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC – Integrated Food Security Phase Classification) என்றழைக்கப்படும் அமைப்பு ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

23 லட்சம் பேருக்கு உணவுப்பற்றாக்குறை

அதன்படி, சுமார் 20 லட்சம் பேர், அதாவது காசாவின் மக்கள் தொகையில் 93 விழுக்காடு பேர், கடுமையான உணவுப் பற்றாக்குறையுடன் வாழ்வது தெரியவந்துள்ளது.

அவர்களில் 2,44,000 பேர், அதாவது 12 சதவீத மக்கள், மிகக் கடுமையான அல்லது “பேரழிவு” உணவுப் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றனர் என்றும் IPC அறிக்கை கூறுகிறது.

“செப்.-க்குள் 22% பேர் பேரழிவு வகைக்குள் வருவர்”

வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சுமார் 4,70,000 பேர், அதாவது மக்கள் தொகையில் 22 விழுக்காடு பேர் பேரழிவு வகைக்குள் வருவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, மேலும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் “அவசரநிலை” நிலைகளில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

“மே 11 முதல் செப்டம்பர் 2025 இறுதி வரை, முழு காசாவும் அவசரநிலையில் (IPC கட்டம் 4) வகைப்படுத்தப்பட்டுள்ளது, முழு மக்களும் நெருக்கடியை அல்லது மோசமான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை (IPC கட்டம் 3 அல்லது அதற்கு மேல்) எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x