4 இஸ்ரேலிய பெண் சிப்பாய்கள் விடுவிப்பு
காசா எல்லையில் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

காசா, ஜன.25; ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 4 இஸ்ரேலிய பெண் சிப்பாய்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி இன்று விடுவிக்கப்பட்டனர். 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காசா எல்லைக்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த நால்வரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் அப்போது வீடியோவாக படம்பிடிக்கப்பட்டது. இஸ்ரேல் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் வழங்கிய பட்டியலின்படி, நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர். காசா எல்லையில் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் வீடுகளுக்குப் அழைத்துச் செல்லப்பட்டனர்.







