சிட்னி டெஸ்ட்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
மீண்டும் எதிர்ப்பின்றி பணிந்தது இந்திய அணி

சிட்னி, ஜன.5 ; சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 157 ரன்களுக்கு சுருண்டது. ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் குவித்தார். 162 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.







