சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர் …?
உறுதியான முடிவெடுக்க வேண்டிய சூழலில் ரோகித் சர்மா

மும்பை, பிப்.04; சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதைத் தவிர வழியில்லை எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்த படுதோல்வியடைந்த நிலையில், சில மாதங்களுக்கு கேப்டன் பொறுப்பில் நீடிக்க அனுமதிக்க வேண்டுமென ரோகித் கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கும் அவரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தொடர் முடிந்ததும், தனது எதிர்காலத் திட்டங்களை தெளிவுபடுத்துமாறு ரோகித் சர்மாவை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, ரோகித் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளார்.



