காலில் கட்டுடன் கவலையுடன் ராஷ்மிகா மந்தனா
3 வாரத்திற்கு 'நோ ஷூட்டிங்'; ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை, ஜன.12; உடற்பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். படங்களில் பிசியாக இருக்கும் அவர், காயம் காரணமாக தன்னால் மூன்று வாரத்திற்கு நடக்க முடியாது என்று சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் தன்னை மன்னிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ராஷ்மிகா காயமடைந்துள்ளதால், அவர் தொடர்பான படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகாவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.







